விமான நிலைய ஸ்கேனிங் நடைமுறைகளில் மேம்பாடு: அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
- Surendran Sumdraraj
- 13 Aug, 2026
புத்ராஜெயா, ஆக. 13-
விமான நிலையங்களில் பயணிகள் மற்றும் பொருட்களை ஸ்கேன் செய்யும் நடைமுறைகளுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளில் (SOP) மேற்கொள்ளப்படவுள்ள மேம்பாடுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விமான நிலையங்களில் ஸ்கேனிங் இயந்திரங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக எழுந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சு (KDN) இந்த மேம்பாடுகளைத் தயாரித்து வருவதாக அவர் கூறினார்.
ஸ்கேனிங் இயந்திரங்களின் பயன்பாட்டுக்கான நடைமுறைகள் மற்றும் அதன் செயல்பாட்டு வரம்பு ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து ஸ்கேனிங் உபகரணங்களும் தேவையான தரத்தில் செயல்படுவதை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து மேம்படுத்துவதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



