“சமூகத்துக்கு கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்” – வெளிப்படையாக பேசிய கவின்
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
சென்னை: சமூகத்திற்கு முடிந்தவரை எந்தவிதமான கெடுதலும் ஏற்படுத்தாமல் இருப்பதே முக்கியம் என நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய கவின், பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து ‘நட்புனா என்ன தெரியுமா’, ‘லிப்ட்’, ‘டாடா’, ‘ஸ்டார்’, ‘கிஸ்’, ‘ப்ளடி பக்கர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.
தற்போது நயன்தாராவுடன் இணைந்து ‘ஹாய்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக அளித்த பேட்டியில் கவின் தனது சமூகப் பொறுப்பு குறித்த பார்வையைப் பகிர்ந்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



