டேவிஸ் கோப்பையைத் தொடர்ந்து மூன்றாவது முறை வென்றது இத்தாலி

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

போலோன்யா, நவ. 24-

இத்தாலி டென்னிஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக டேவிஸ் கோப்பை பட்டத்தை வென்று அபார சாதனை படைத்தது. போலோன்யாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயினை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இத்தாலி இந்த மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் மத்தேயோ பெர்ரெட்டினி, ஸ்பெயினின் பாப்லோ கர்ரேனோ புஸ்தாவை நேர் செட்களில் (6-3, 6-4) எளிதாக வீழ்த்தினார். சொந்த மண்ணில் ரசிகர்களின் ஆரவாரத்தால் உற்சாகமடைந்த பெர்ரெட்டினி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இரண்டாவது ஒற்றையர் ஆட்டமே உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. பிளாவியோ கோபோல்லி முதல் செட்டை 1-6 என்று இழந்து தோல்வியை நோக்கி சென்றார். ஆனால் அடுத்தடுத்த செட்களில் அற்புதமாக மீண்டு வந்த அவர், ஜாமே மூனாரை டை-பிரேக்கரில் 7-6(5), இறுதி செட்டில் 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி இத்தாலிக்குப் பட்டத்தை உறுதி செய்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *