நயன்தாரா படத்தைத் தள்ளிவைத்த நித்திலன்!

top-news

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து நித்திலன் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். ஆனால் தற்போது அந்த கதையைக் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தையும் மகாராஜா படத்தைத் தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதிபதி பூரி ஜெகன்னாத படத்தில் நடித்து முடித்ததும் இந்த படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *