ஓம்ஸ் தியாகராஜனை சந்தித்தார் மித்ரா தலைவர் பிரபாகரன்!
- Muthu Kumar
- 21 Nov, 2024
கோலாலம்பூர், நவ. 21-
மித்ரா எனப்படும் மலேசிய சமூக பொருளாதார உருமாற்றுத் திட்டம் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவிருக்கிறது.அது குறித்து நேற்று ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜனை மித்ரா தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து விளக்கமளித்தார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனுடன் மித்ரா பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதோடு மித்ராவின் செயல்திட்டங்களை ஓம்ஸ் தியாகராஜனிடம் விவரித்தனர்.மித்ராவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்தும் மக்களுக்கு பொருளாதார ரீதியில் எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்தும் அந்த சந்திப்பில் பிரபாகரன் விவரித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது.மேலும் ஓம்ஸ் தியாகராஜனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பொன்னாடை, மாலை அணிவித்து சிறப்புச் செய்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *