தன் அடுத்த படத்தை அறிவித்த சிவகார்த்திகேயன்!

top-news
FREE WEBSITE AD

மதராஸி படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக வெளியாக இருப்பது அவரின் SK24 தான். ஆனால் இன்றளவும் SK24 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பே வெளியாகவில்லை.

முதலில் டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குவதாக இருந்தது, அதன் பிறகு குட் நைட் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் சிவகார்த்திகேயனின் 24 ஆவது படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை SK24 திரைப்படத்தின் இயக்குனர் யார் என்பதில் மிகப்பெரிய இழுபறி இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக தான் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடாமல் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது சிவகார்திகேயனே தன் அடுத்த படத்தை பற்றி கூறியிருக்கின்றார். தன் அடுத்த படம் சிபி சக்ரவர்த்தியோடு தான் என சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். சிபி சக்கரவாதி இயக்கத்தில் தான் அடுத்ததாக நடிக்கவுள்ளேன். அப்படத்தை நான் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றேன். அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றேன். இப்படங்களை தொடர்ந்து புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டு இருக்கின்றது என தன் அடுத்தடுத்த லைன் அப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார் சிவகார்த்திகேயன்.

இதன் மூலம் கடந்த பல மாதங்களாக SK24 திரைப்படத்தின் இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்விக்கும் குழப்பத்திற்கும் சிவகார்த்திகேயன் பதிலளித்து இருக்கின்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *