சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்திற்கு, "சேயோன்" என டைட்டில் அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்திற்கு, படக்குழு "சேயோன்"  என டைட்டில் வைத்துள்ளது. இப்படமானது தெய்வீகம் கலந்த பேண்டஸி கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். தற்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், நடிகர் சிவகார்த்திகேயன் கையில் அரிவாளுடனும், அவரின் பின் மயில்தோகைகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் இப்படமானது தமிழ் கடவுள் முருகன் குறித்த கதையில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது, மேலும் இப்படத்தின் அறிமுக புரோமோ வீடியோ 2026  இன்று பிப்ரவரி 17ம் தேதியில், காலை 10 மணியளவில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயனின் பராசத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடித்திருந்தார். தற்போது ஸ்ரீலீலாவும் தனுஷிற்கு ஜோடியாக புது படத்தில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் தெலுங்கு நடிகையுடன் ஜோடியாக நடிக்கவுள்ளாராம். அந்த நடிகை வேறுயாருமில்லை காந்தா படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்தான். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *