இரட்டை சந்தோசத்தில் சிவசங்கரி!

top-news


பெட்டாலிங் ஜெயா, ஜூன் 9: பர்மிங்காமில் சனிக்கிழமை நடைபெற்ற புரொபஷனல் ஸ்குவாஷ் அசோசியேஷன் (PSA) மொமன்ட் ஆஃப் தி சீசன் மற்றும் பெண்கள் மேட்ச் ஆஃப் தி சீசன் விருதுகளைப் பெற்று சிறந்த மலேசிய வீராங்கனை என்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் எஸ்.சிவசங்கரி.

லண்டன் கிளாசிக்கில் போட்டியில் சிவசங்கரியின் அற்புதமான ஓட்டத்திற்காக PSA Moment of the Season விருது கிடைத்தது. அங்கு அவர் ஏப்ரல் 1 ஆம் தேதி  தனது முதல் PSA தங்க நிலை பட்டத்தை வென்றதற்காக உலகின் நம்பர் 3 ஹனியா எல் ஹம்மாமியை தோற்கடித்தார்.

 உலக நம்பர் 1 வீராங்கனை நூர் எல் ஷெர்பினி (கால்இறுதி), பின்னர் உலகின் 4ம் நிலை வீராங்கனையான நெலே கிலிஸ் (அரையிறுதி), 3வது இடத்தில் இருந்த எல் ஹம்மாமி ஆகியோரையும் தோற்கடித்தார்.

எல் ஹம்மாமியை ஐந்து செட்களில் போராடி அசத்தல் வெற்றிபெற்றார். இறுதி வெற்றி 81 நிமிடங்கள் நீடித்தது. இந்த வெற்றி அவருக்கு PSA மேட்ச் ஆஃப் தி சீசன் விருதைப் பெற்றுத் தந்தது.

 

.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *