2025 சின்சினாட்டி கெய்னர் கோப்பை சீசனின் முதல் பட்டத்தை வென்றார் சிவசங்கரி!

top-news

கோலாலம்பூர், பிப்.11-

தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி, சின்சினாட்டி கெய்னர் கோப்பை 2025ல் ஐந்து செட்கள் கொண்ட ஆட்டத்தில், இரண்டாம் நிலை வீராங்கனையான அமண்டா சோபியைத் தோற்கடித்து, சீசனின் முதல் பட்டத்தை வென்றார்.

நேற்றைய அரையிறுதியில் நடப்புச் சாம்பியனும், போட்டியின் முதல்நிலை
வீராங்கனையுமான ஒலிவியா வீவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிவசங்கரி, கிளீவ்லேண்ட் கன்ட்ரி கிளப்பில் நடந்த 48 நிமிட இறுதிப் 11-7, 6-11, 7-11, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் தனது சிறப்பான வேகத்தைத் தொடர்ந்தார்.

அமன்டாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருந்ததே தனது வெற்றிக்கான காரணம் என்றார் சிவசங்கரி.

சிவசங்கரி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக்கில் தனது கடைசி வெற்றியைப் பெற்றதன் மூலம், இந்த ஆண்டின் முதல் பட்டத்தைப் பெற்ற பிறகு மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார். கடந்த சில மாதங்களாக தான் சேகரித்த அனுபவத்தில் இருந்து இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றார் அவர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *