"ஜாலுர் கெமிலாங்கைச் சுமந்து செல்வதற்கு ஆறு இளம் விளையாட்டாளர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன!

top-news
FREE WEBSITE AD

புக்கிட் ஜாலில், நவ.2-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டியில் ஜாலுர் கெமிலாங்கைச் சுமந்து செல்வதற்கு ஆறு இளம் விளையாட்டாளர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

டிசம்பர் 3ஆம் தேதி அதற்கான முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அந்த விளையாட்டாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மலேசிய ஒலிம்பிக் மன்றத்துடன் விவாதிக்கப்படும் என்று இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

"தேசிய விளையாட்டு மன்றத் தலைவர், ஆறு வேட்பாளர்கள் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.மலேசிய ஒலிம்பிக் மன்றத்துடன் நான் பரிசீலிக்க வேண்டிய பெயர்களை அவர்கள் என்னிடம் வழங்குவார்கள். ஜாலூர் கெமிலாங்கை சுமந்து செல்வதில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் மிகவும் பொருத்தமான வேட்பாளரைத் தேர்வு செய்ய நாங்கள் பொதுவாக ஒன்றாக விவாதிப்போம், என ஹன்னா இயோ கூறினார்.

புக்கிட் ஜாலிலில், டத்தோ நிக்கோல் டேவிட் அமைப்பு ஏற்பாடு செய்த விளையாட்டு, மனநல மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஹன்னா இயோ இவ்வாறு கூறினார்.33ஆவது முறையாக நடைபெறவிருக்கும் அந்த விளையாட்டுப் போட்டிக்கு தேசிய அணியின் அதிகாரப்பூர்வ உடையாக மலேசியாவின் பாத்தேக் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஹன்னா மேலும் தெரிவித்தார்.

இப்போட்டியில் பதக்கம் வெல்வதற்கான இலக்கை மலேசியா நிர்ணயித்திருந்தாலும், விளையாட்டாளர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய எண்ணிக்கை முடிவு செய்யப்படவில்லை என்று அவர் விளக்கினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *