நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டன

top-news

கோலாலம்பூர், அக். 7: முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவலை அமல்படுத்துவது தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் விவரங்களை மலேசிய சிறைத்துறை அவரிடம் தெரிவித்துள்ளது.

பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ ஸம்ரி மிஸ்மான், வீட்டுக் காவல் தொடர்பான நடைமுறைகளின் விவரங்கள் நஜிப்பிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“சிறைத்துறை டத்தோ ஸ்ரீ நஜிப்பிடம் அதன் விவரங்களைத் தெரிவித்துள்ளது,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

முன்னதாக, நஜிப்பின் வீட்டுக் காவல் அமலாக்கத்திற்கான நடைமுறைகளில் வருகையாளர்கள், அவரது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நஜிப்பின் இல்லத்தின் பாதுகாப்பு அம்சங்களை மதிப்பிடுவதற்காகக் காவல்துறையும் சிறைத்துறையும் கடந்த செப்டம்பர் மாதம் ஒருங்கிணைப்புக் கூட்டத்தையும் நடத்தியிருந்தன.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *