நேபாள வெள்ளம்: ஈஷா குழுவினர் 80 பேருடன் தொடர்பு துண்டிப்பு – கண்கலங்கிய ஜக்கி வாசுதேவ்

top-news
FREE WEBSITE AD

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கண்கலங்கியபடி வெளியிட்ட காணொளியில், நேபாளத்திற்குப் புனித யாத்திரை சென்ற ஈஷா குழுவினருடன் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். அந்தக் குழுவில் 34 ஆண்களும் 46 பெண்களும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தக் குழுவில் இந்தியர்கள் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மாயமானவர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அப்பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன,” என்று ஜக்கி வாசுதேவ் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *