வசூல் வேட்டையில் ‘ஜனநாயகன்’ திரைப்படம்
- Surendran Sumdraraj
- 27 Jul, 2026
சென்னை, ஜூலை 27-
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, படம் வெளியான முதல் 4 நாட்களில் ரூ.217.48 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’, விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது. அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தும் முன் விஜய் நடித்த கடைசி திரைப்படம் என்ற எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் வார இறுதி விடுமுறை நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்ததால் வசூலும் தொடர்ந்து உயர்ந்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது. படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானதாகத் தகவல்கள் வெளியான நிலையிலும், விஜய்யின் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு திரண்டு ஆதரவு அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



