24 வயது இளைஞர் மருத்துவமனையில் வெட்டிக் கொலை! இருவர் கைது!
- Thina S
- 27 Aug, 2024
JASIN மருத்துவமனையின்
வளாகத்தில் முகமூடி அணிந்த கும்பல் 24 வயது இளைஞரைக் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவு 9,30 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில்
24 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி இரவு 10.15 மணிக்கு உயிரிழந்ததாக JASIN மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Jamil Radzi தெரிவித்தார்.
4 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனையின் நுழைவாயிலில் நின்றுக் கொண்டிருந்த 24 வயது இளைஞரைத்
தாக்கியதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 21 வயது மற்றும் 31 வயது என இரு சந்தேக
நபர்களைக் கைது செய்துள்ளதாகவும் மேலும் இருவரைக் காவல் துறையினர் தேடி வருவதாக அவர்
தெரிவத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *