இருமுறை பின்தங்கியும் போராடிய ஜப்பான்; நெதர்லாந்துடன் 2-2 என சமநிலை

top-news

ஆர்லிங்டன் (டெக்சாஸ்), ஜூன் 15 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் எப்’ பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணி அபாரமான போராட்ட குணத்தை வெளிப்படுத்தி, இருமுறை பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு நெதர்லாந்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

போட்டியின் முதல் பாதியில் ஜப்பானின் உறுதியான தற்காப்பு ஆட்டத்தை உடைக்க முடியாமல் திணறிய நெதர்லாந்து, இரண்டாவது பாதியின் 51-ஆவது நிமிடத்தில் கேப்டன் விர்ஜில் வான் டைக் அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது. ரயன் கிராவென்பெர்ச் வழங்கிய துல்லியமான குறுக்குப் பாஸை அவர் கோலாக மாற்றினார்.

எனினும், அந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வெறும் ஆறு நிமிடங்களிலேயே ஜப்பான் வீரர் கெய்டோ நகமுரா, பெனால்டி எல்லைக்கு வெளியே இருந்து சக்திவாய்ந்த ஷாட் அடித்து கோல் பதிவு செய்து ஆட்டத்தை 1-1 என சமநிலைப்படுத்தினார்.

அதன்பின்னர் மீண்டும் முன்னிலை பெற நெதர்லாந்து கடுமையாக போராடிய நிலையில், ஜப்பானும் விட்டுக்கொடுக்காமல் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பதிவு செய்து தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *