இந்தோனேசிய காட்டுத் தீயை கட்டுப்படுத்த உதவ மலேசியா தயார் – பாமி பட்சில்
- Surendran Sumdraraj
- 09 Sep, 2026
புத்ராஜெயா, செப். 9 –
இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக பிராந்திய நாடுகளில் புகைமூட்டம் அதிகரித்துள்ள நிலையில், தீயைக் கட்டுப்படுத்த உதவ தேவையான உபகரணங்களை அனுப்ப மலேசியா தயாராக இருப்பதாக ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஸ்ரீ பாமி பட்சில் தெரிவித்துள்ளார்.
எனினும், உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தோனேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் மற்றும் அனுமதிக்காக மலேசியா தற்போது காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயிலிருந்து உருவாகும் புகை, காற்றின் திசை மற்றும் வேகத்தை பொறுத்து மலேசியாவை நோக்கி நகரும் சாத்தியம் இருப்பதால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

