சட்டவிரோத சூதாட்ட மையம் நடத்திய வெளிநாட்டினர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 13 Aug, 2026
ஆகஸ்ட் 13,
சட்டவிரோதமாக சூதாட்ட மையத்தை நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். SERI KEMBANGAN வணிக வளாகத்தில் தேசிய குடிநிலைவுட் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 6 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வணிக வளாகத்தின் பின்னால் இயங்கி வந்த சூதாட்ட மையத்தை அவர்கள் நடத்தி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 6 பேரில் 40 வயது இந்தோனேஷியா பெண் அந்த வணிக வளாகத்தைக் குத்தகைக்கு எடுத்து கடந்த 5 மாதங்களாக நடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 45 வயதுக்குட்படவர்கள் என்றும் அனைவரும் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலில் இப்போதைக்கு 3 பெண்கள் 3 ஆண்கள் என INDONESIA, BANGLADESH நாடுகளைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



