உலக புகழ் பெற்ற நடனத்தை மைதானத்தில் ஆடிய அஜித் மகன் ஆத்விக்!
- Muthu Kumar
- 20 Dec, 2025
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் சினிமா மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.அஜித் ரேஸிங் டீம் என்ற அணியை தொடங்கி பல நாடுகளில் கார் ரேஸில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸில் பங்கேற்றுள்ளார். நடிகர் அஜித் கார் ரேஸில் பங்கேற்பதால் அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் க்யூவில் காத்திருக்கின்றனர்.
பொதுவாக பலர் ஒரு துறையில் இருக்கும்போதே குடும்பத்தை கவனிக்க நேரமில்லை என சொல்வார்கள்.அஜித்தோ சினிமா, ரேஸ் என இரண்டு துறைகளில் பிஸியாக இருந்தாலும் எங்கே சென்றாலும் தனது குடும்பத்தை பெரும்பாலும் அழைத்து சென்றுவிடுகிறார்.
தனது வாழ்வின் அனைத்து முக்கியமான தருணங்களிலும் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் தன் அருகில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்கிறார். அவரது இந்த குணம் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் பிரபல இந்தோனேசிய சிறுவனின் நடனத்தை ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவன் படகில் நின்று ஆடிய Aura Framing நடனத்தை ஆத்விக் மைதானத்தின் கேலரி போன்று இருக்கும் ஒரு இடத்தின் கம்பத்தில் ஏறி நின்று ஆடினார். அதை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர அது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள், ஆத்விக் செமயா டான்ஸ் ஆடுறாரே.. செம எனர்ஜியா இருக்காரு, அஜித் போலவே இருக்கார் என்று கமெண்ட்ஸ் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



