ஆளே மாறிய அஜித்-மார்பில் குத்தியிருக்கும் டாட்டூ என்ன உருவம் தெரியுமா?
- Muthu Kumar
- 25 Oct, 2025
நடிப்பு, கார் ரேஸ் என பிஸியாக இருக்கும் நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்தினருடம் நேரம் செலவழிப்பதில் கவனமாக இருக்கிறார். அந்தவகையில் தனது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் உள்ளிட்டோருடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருக்கும் பெருவெம்பா கிராமத்தில் அமைந்திருக்கும் ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு வந்த ரசிகர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
கோயிலுக்கு வந்த அஜித் மேலாடை அணியாமல் இருந்தார். அப்போது வலது மார்பில் டாட்டூ ஒன்றையும் குத்தியிருந்தார். அதனைப் பார்த்த பிறகு அது என்ன உருவம் என்று பலரும் தேட ஆரம்பித்துவிட்டார்கள். அவர் போட்டிருக்கும் டாட்டு பகவதி அம்மனின் உருவம்தான் என்று சொல்லப்படுகிறது. அந்த தெய்வம்தான் அஜித்தின் குல தெய்வம் என்பதும், அடிக்கடி அங்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



