ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தீவிரம் – மகன் ஹன்டர் தகவல்
- Surendran Sumdraraj
- 10 Aug, 2026
வாஷிங்டன், ஆக. 10-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அவரது மகன் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனுக்கு கடந்த 2025ஆம் ஆண்டு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த நோய் எலும்புகளுக்குப் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புற்றுநோய் மேலும் பரவியிருப்பதாகவும், அது தனது தந்தைக்குக் கடுமையான வலியையும் உடல்நலப் பாதிப்பையும் ஏற்படுத்தி வருவதாகவும் ஹன்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஹன்டர் பைடன், தனது தந்தையின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்ததுடன், அவரது தற்போதைய நிலையைப் பார்ப்பது மிகவும் வேதனையாக இருப்பதாகக் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



