Johor Bahru City Square வணிக வளாகத்தில் தீ! 100க்கும் மேற்பட்டோர் மீட்பு!
- THINAGAREN SANGGAREN
- 07 Oct, 2026
அக்தோபர் 7,
ஜொகூரில் உள்ள பிரபல வணிக வளாகமான Johor Bahru City Square வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 3.40 மணிக்கு வணிக வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் Johor Bahru City Square வளாகத்திற்கு 52 மீட்புப் பணியாளர்களுடன் விரைந்ததாக LARKIN மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் இயக்குநர் Mohd Suhaimi தெரிவித்தார்.
வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் தளத்தில் உள்ள ஒரு வாகனத்தில் ஏற்பட்ட தீ வணிக வளாகத்துக்குள் பரவும் முன்னரே தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் வணிக வளாகத்துக்குள்ளே இருந்த 100க்கும் மேற்பட்டவர்களை விரைந்து மீட்டதாகவும் Mohd Suhaimi தெரிவித்தார். வாகனம் நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த 11 வாகனங்கள் முழுமையாகத் தீயில் கருகியதாக Mohd Suhaimi தெரிவித்தார். இச்சம்பவத்தில் 4 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் லர்கீன் மாவட்டத் தீயணைப்பு ஆணையர் Mohd Suhaimi தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

