மிகப்பெரிய போட்டியாளரை ஓய்விற்கு பின் தனது பயிற்சியாளராக நியமித்த ஜோகோவிச்!

top-news

நான்கு வகை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் செர்பிய வீரரும், நம்பர் 2 வீரருமான நோவக் ஜோகோவிச் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை புதிய பயிற்சியாளராக அறிவித்தார்.

அனுபவம் வாய்ந்த டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.

இதுதொடர்பாக ஜோகோவிச் கூறுகையில், எனது மிகப்பெரிய போட்டியாளர்களில் ஒருவரை வலையின் அதே பக்கத்தில், இந்த முறை எனது பயிற்சியாளராக இருப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *