யு எஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் வெற்றியுடன் ஆட்டத்தை ஆரம்பித்த ஜோகொவிச்!

top-news

அமெரிக்காவின் நியூயார்க்கில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-2' வீரர், செர்பியாவின் ஜோகோவிச் தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறி மால்டோவாவின் ராடு ஆல்போட்டுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-2, 6-4 என எளிதாக வெற்றி பெற்றார்.

இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச், யு.எஸ்.ஓபனில் பெற்ற 89 வது வெற்றி  ஆகும்.  இங்கு அதிக வெற்றி பெற்ற வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ள பெடரரை சமன் செய்தார். முதலிடத்தில் அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ்  உள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா, அசரன்கா, செக் குடியரசின் கிரெஜ்ஜிகோவா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, ஸ்பெயினின் படோசா, அமெரிக்காவின் கோகோ காப் உள்ளிட்டோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் 16 வயது வீராங்கனை இவா ஜோவிச், 6-4, 6-3 என போலந்தின் லினெட்டியை வென்றார். 2000க்குப் பின் யு.எஸ்.ஓபனில் வெற்றி பெற்ற இளம் அமெரிக்க வீராங்கனை ஆனார்.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *