பின்தங்கிய நிலையிலிருந்து மீண்ட அல்ஜீரியா; ஜோர்டானை 2-1 என வீழ்த்தியது
- Surendran Sumdraraj
- 23 Jun, 2026
சாண்டா கிளாரா, ஜூன் 22 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் ஜே’ பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியா அணி பின்தங்கிய நிலையிலிருந்து அபாரமாக மீண்டு ஜோர்டானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாண்டா கிளாராவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஜோர்டான் அணி முதல் பாதியில் சிறப்பாக விளையாடியது. 36-ஆவது நிமிடத்தில் நிசார் அல்-ரஷ்தான் அடித்த கோல் மூலம் ஜோர்டான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இடைவேளைக்குச் சென்றது.
ஆனால் இரண்டாவது பாதியில் அல்ஜீரியா தனது ஆட்ட வேகத்தை அதிகரித்தது. தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்கு பலனாக 69-ஆவது நிமிடத்தில் நாதிர் பென்புவாலி சமநிலை கோலை அடித்தார்.
இதனால் ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்த நிலையில், வெற்றிக்காக கடுமையாக போராடிய அல்ஜீரியா 82-ஆவது நிமிடத்தில் அமின் குவிரி மூலம் வெற்றிக் கோலைப் பதிவு செய்தது. அந்த கோல் இறுதிவரை நிலைத்ததால் அல்ஜீரியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



