அரசு ஊழியர்களின் வருமானத்தை மேம்படுத்த புதிய முயற்சிகள் – ஜேபிஏ ஆய்வு
- Surendran Sumdraraj
- 14 Sep, 2026
புத்ராஜெயா, செப். 14 –
நாட்டில் அரசு ஊழியர்களின் வருமானத்தை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு புதிய முயற்சிகளைப் பொது சேவைத் துறை ஆய்வு செய்து வருவதாக அதன் தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் வான் அகமது டஹ்லான் அப்துல் அசீஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லை என்றும், இருப்பினும் அவர்கள் தங்களது மாதாந்திர செலவுகளைத் திட்டமிட்டு நிர்வகிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
“தற்போதைய சம்பளத்தைப் பார்க்கும்போது அரசு ஊழியர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் இல்லை. ஆனால், அவர்கள் தங்களது வருமானத்திற்கு ஏற்ப செலவுகளைப் புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டும்,” என்று வான் அகமது டஹ்லான் தெரிவித்தார்.
அதேவேளையில், வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊழியர்களின் வருமானத்தை உயர்த்துவதற்கும் அவர்களின் நிதிச் சுமையை குறைப்பதற்கும் உதவும் வாய்ப்புகள் குறித்து பொது சேவைத் துறை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

