JPJ அதிகாரி படுகாயம்! லாரி ஓட்டுநர் கைது! - KUANTAN

top-news
FREE WEBSITE AD

நேற்று மாலை  gambang நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்த சாலை போக்குவரத்து குற்றப்பிரிவு அதிகாரியின் வாகனத்தை லாரி மோதியதில் அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நேற்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், காயமடைந்த 38 வயது அதிகாரி குவாந்தானில் உள்ள Tengku Ampuan Afzan மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர்  Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். படுகாயம் அடைந்த JPJ அதிகாரிக்கு முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குக் காரணமான 57 வயது லாரி ஓட்டுநரைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *