2026 உலகக் கிண்ண சாம்பியனுக்கு 50 மில்லியன் டாலர் பரிசு: பீபா அறிவிப்பு

top-news

பாரிஸ், டிச. 18-

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் அணி 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக 204 மில்லியன் ரிங்கிட்) பரிசுத்தொகை பெறும் என்று அனைத்துலகக் கால்பந்து சம்மேளனம் (பீபா) அறிவித்துள்ளது.

போட்டியின் மொத்த பரிசுத்தொகை நிதி 655 மில்லியன் டாலர்கள் (2.670 பில்லியன் ரிங்கிட்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த கத்தார் 2022 உலகக் கோப்பையில் வழங்கப்பட்ட 440 மில்லியன் டாலர்களை (1.795 பில்லியன் ரிங்கிட்) விட அதிகமாகும்.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள இந்த போட்டி, 48 அணிகள் பங்கேற்கும் முதல் உலகக் கோப்பை ஆகும்.

இந்த அதிகரித்த பரிசுத்தொகை அணிகளுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *