லியோங் ஜூன் ஹாவ் உலக தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார்
- Tamil Malar (Reporter)
- 24 Sep, 2025
கோலாலம்பூர், செப். 24-
செய்தி-வெற்றி மைந்தன்
மலேசியாவின் முன்னணி ஆடவர் ஒற்றையர் வீரர் லியோங் ஜூன் ஹாவ், உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் இன்றைய புதுப்பிக்கப்பட்ட தரவரிசையின்படி,
தனது வாழ்க்கையில் முதல் முறையாக உலகின் முதல் 20 தரவரிசைக்குள் நுழைந்து சாதனை படைத்தார்.
கடந்த வாரம் சீனா மாஸ்டர்ஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில்
தோல்வியடைந்த போதிலும், ஜூன் ஹாவ் இரண்டு இடங்கள் முன்னேறி உலக தரவரிசையில் 20-ஆவது இடத்தைப் பிடித்தார். தற்போது நடைபெற்று வரும் கொரியா ஓபனில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், தனது
தரவரிசையை மேலும் மேம்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஜூன் ஹாவின் இந்தச் சாதனை, அவரது சீரான ஆட்டத்தையும்,
உறுதியையும் பிரதிபலிக்கிறது. கோரியா ஓபனில் அவர் தனது திறமையை
மேலும் வெளிப்படுத்தி, மலேசிய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு
பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், தொழில்முறை வீரரான லீ சி ஜியா, சீனா
மாஸ்டர்ஸ் போட்டியின் முதல் சுற்றில் இருந்து விலகிய போதிலும், உலக தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 41-ஆவது இடத்தைப்
பிடித்து சிறிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார். இந்த முன்னேற்றம், அவரது தொடர்ச்சியான முயற்சிகளையும், போட்டி
மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



