ஜோகூர் மாநிலத் தேர்தலில் MCA போட்டியிடும்: வீ கா சியோங் உறுதி
- Surendran Sumdraraj
- 05 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 4 –
வரவிருக்கும் ஜோகூர் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில் (PRN16) , (MCA) போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆயிர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் அங்கக் கட்சியாக MCA தேர்தலில் பங்கேற்பது உறுதி என்றும், ஆனால் போட்டியிடவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
“எதற்காக MCA போட்டியிடாது? நாங்கள் கண்டிப்பாக போட்டியிடுவோம். ஆனால் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை மதிக்கும் வகையில், எந்தத் தகவலையும் முன்கூட்டியே வெளியிட விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
ஜோகூர் மாநில முதலமைச்சர் டத்தோ ஒன் ஹபீஸ் காசி கடந்த திங்கட்கிழமை மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மாநிலத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதனையடுத்து பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.
கடந்த தேர்தல்களில் பாரிசான் நேஷனல் கூட்டணிக்குள் MCA முக்கிய பங்காற்றியிருந்த நிலையில், இந்த முறையும் கட்சி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தொகுதிகளில் களமிறங்கும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

