‘டிசி’ படக்குழுவினருக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு – கலாநிதி மாறன் அசத்தல்

top-news

சென்னை, செப். 11 –

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘டிசி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படக்குழுவினருக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களைப் பரிசாக வழங்கியுள்ளார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வழக்கமாக இயக்குநராக அறியப்படும் லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தின் மூலம் முழுநேர கதாநாயகனாக அறிமுகமானார்.

‘டிசி’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், வாமிகா கபி ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அதிரடி காட்சிகள் மற்றும் வித்தியாசமான கதைக்களம் காரணமாகப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், சரத் சந்திர சட்டோபாத்யாயாவின் புகழ்பெற்ற ‘தேவதாஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு பழிவாங்கும் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ரக சொகுசு கார்களை கலாநிதி மாறன் பரிசாக வழங்கியுள்ளார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *