கள்ளக்கடல் நிகழ்வு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

top-news
FREE WEBSITE AD

கன்னியாகுமரி: கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால், ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தென் இந்திய கடலோரப் பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கடல் அலைகள் அதிக உயரத்துடன் எழும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் தற்போது 1.9 முதல் 2.1 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழுகின்றன. இதையடுத்து மீனவர்கள் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளச்சல், முட்டம், தேங்காய்ப்பட்டணம் உள்ளிட்ட துறைமுகங்களில் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *