கடைசி நிமிட கோலில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய கனடா; அடுத்த சுற்றுக்கு வரலாற்று முன்னேற்றம்
- Surendran Sumdraraj
- 29 Jun, 2026
இங்கிள்வுட், ஜூன் 29 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32 அணிகள் சுற்றில், கனடா, கூடுதல் நேரத்தில் அடித்த கோலின் உதவியுடன் தென்னாப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 16-ஆவது சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாகச் சாதனை படைத்தது.
இங்கிள்வுட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் கடுமையாக மோதின. முதல் பாதி முழுவதும் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போராடின.
போட்டி கோலின்றி சமநிலையில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேர 92-ஆவது நிமிடத்தில் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ அபாரமான தொலைதூர ஷாட்டின் மூலம் வெற்றிக்கான ஒரே கோலைப் பதிவு செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் கனடா உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 16-ஆவது சுற்றுக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்துள்ளது.
அடுத்த சுற்றில் கனடா, மொராக்கோ – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் வெற்றியாளரை ஹூஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் எதிர்கொள்ளவுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



