காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு அழுத்தம் தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஆக. 14-

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பங்கு நீரை கர்நாடக அரசு முழுமையாகத் திறந்துவிடுவதற்கு, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவை எட்டியவுடன் தமிழகத்துக்கான பங்கு நீரைத் திறந்துவிட வேண்டும் என்பது வழிகாட்டு நெறிமுறை என அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அணைகள் முழுமையாக நிரம்பிய பின்னரே தமிழகத்துக்கு நீர் வழங்கப்படும் என கர்நாடக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதாகவும், அவற்றை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நீர் மற்றும் மாதாந்திர பங்கு நீரை முழுமையாகப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *