கார்த்திக் சுப்பராஜின் புதிய படம் ‘டோரதி’: பர்ஸ்ட் லுக் வெளியீடு

top-news

சென்னை, ஆக. 5-

 இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய திரைப்படமான ‘டோரதி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து படங்களை உருவாக்கி வரும் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படைப்பாக இது உருவாகி வருகிறது.

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தனது தனித்துவமான திரைக்கதை மற்றும் இயக்கத்திற்காக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர்.

இந்நிலையில், அவரது புதிய படமான ‘டோரதி’யின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் மூலம் திரைப்படம் எந்த வகையான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *