கரூர் சமூகநீதி விடுதியில் தரமற்ற உணவு: டிடிவி தினகரன் கடும் கண்டனம்
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
கரூர்: கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள காணொளி, அரசின் சமூகநீதி கொள்கை மற்றும் மாணவர்கள் மீதான அக்கறையை கேள்விக்குறியாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் சமூகநீதி விடுதிகளில் தரமான, சுகாதாரமான உணவு வழங்கப்பட வேண்டியது அரசின் அடிப்படைப் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



