சிறந்த இயக்கமாகப் பெந்தோங் தமிழ் இளைஞர் மணிமன்றம் வெற்றி!

top-news
FREE WEBSITE AD

மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் மாநில அளவில் சிறந்து செயல்படும் இளைஞர் இயக்கங்களுக்காக வழங்கப்படும் விருது வழங்கும் விழாவில் பெந்தோங் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் மணிமன்றம் இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்றது.

இளைஞர் அமைப்புகளுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில் பெந்தோங் தமிழ் இளைஞர் மணிமன்றம் வெற்றிப்பெற்றிருப்பது தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் புத்துணர்ச்சியைக் காட்டுகிறது.பகாங் மாநில இளவரசர் தெங்கு மாக்கோத்தா தெங்கு ஹஸ்னால் இப்ராகிம் அலாம் ஷா விருதையும் ரி.ம 8,000 ரொக்கமும் பெந்தோங் தமிழ் இளைஞர் மணிமன்றத்திற்குவழங்கி கெளரவித்தார். 

பகாங் மாநிலத்தில் சிறந்து விளங்கும் இளைஞர் இயக்கமாக பெந்தோங் தமிழ் இளைஞர் மணிமன்றம் வெற்றிப்பெற்றதற்குத் தொடர்ந்து தமிழ் மொழி சார்ந்தும், இளைஞர் நலன் சார்ந்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது முக்கிய காரணம் என்றும் அவ்வகையிலான் நிகழ்ச்சிக்காகச் சிரமம் பாராது தொண்டுகளை வழங்கிய பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பெலாங்கி சட்டமன்ற உறுப்பினரான டத்தோ அமிசாருக்குப் பெந்தோங் தமிழ் இளைஞர் மணிமன்றம் நன்றி நவில்வதாகப் பெந்தோங் தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் பிரதாப் சசுராஜா தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *