2027 பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு
- Surendran Sumdraraj
- 08 Oct, 2026
கோலாலம்பூர், அக். 8: நாளை தாக்கல் செய்யப்படவுள்ள 2027 பட்ஜெட்டில், நாட்டின் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்புகள் இடம்பெறும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு எதிர்பார்க்கிறது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்பிக் ஜொஹாரி இதனைத் தெரிவித்தார். விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நாட்டின் முழுமையான விளையாட்டு அமைப்பின் வளர்ச்சிக்குத் தேவையான ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என நம்புவதாக அவர் கூறினார்.
அறிவிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீடுகள், தேசிய விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதோடு, மலேசியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டு அமைப்பை முன்னேற்ற உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, விளையாட்டு வீரர்களின் நலன் மிக முக்கியமானது என்று வலியுறுத்திய முகமது தவ்பிக், அவர்கள் போட்டிகளில் பங்கேற்று செயலில் இருக்கும் காலத்தில் மட்டுமின்றி, ஓய்வு பெற்ற பின்னரும் அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

