கெடிஎன் எஃப்சி ஜப்பான் நிறுவனத்துடன் நன்கொடை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கிறது
- Hisha Thamil
- 29 May, 2024
கோத்தா பாரு, மே 30-
மலேசியா லீக் 2024/2025 போட்டிக்கான நன்கொடை ஒப்பந்தத்தை கிளந்தான் டாருல் நைம் எஃப்சி ( கெடிஎன் எஃப்சி), ஜப்பான் நிறுவனமான ஆர்ஓஎச்எம் எலக்ட்ரானிக்ஸுடன் புதுப்பித்துள்ளது.
ஒரு பருவத்திற்கான 200,000 வெள்ளி நன்கொடை நிதி என்பது கடந்த சில ஆண்டுகளாக ஆர்ஓஎச்எம் எலக்ட்ரானிக்ஸ் வழங்கும் ஆதரவு ஆகும் என்று கெடிஎன் எஃப்சி தலைவர் ரோசி முஹமட் கூறினார்.
கடந்த பருவத்தில் ஆர்ஓஎச்எம் எலக்ட்ரானிக்ஸ் உடனான கூட்டாண்மை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததோடு ஜப்பானின் கசோகாவில் உள்ள மூன்று கால்பந்து அகாடமிகளுடன் அனைத்துலக நட்புரீதியான போட்டியில் 16 வயதுக்குட்பட்ட கெடிஎன் எஃப்சி அணி பங்கேற்க வழிவகுத்தது என்று மேலும் கூறினார்.
கெடிஎன் எஃப்சிக்கும் ஆர்ஓஎச்எம் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டாண்மையின் செயல்திறன் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *