தீ விபத்து; 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் தீயணைப்புப் பணி

top-news

கூலிம், ஜூலை 29-

கெடா மாநிலம் லூனாஸ், ஜாலான் மக்மூர் 7 பகுதியில் அமைந்துள்ள நான்கு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணிகள் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எஞ்சியுள்ள தீப்பற்றுகளை முழுமையாக அணைக்கும் நோக்கில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

நேற்று காலை சுமார் 6.53 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், இரண்டு ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலை மற்றும் ஒரு அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை பாதிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் மூன்று தொழிற்சாலைகளில் மட்டுமே தீ பரவியிருந்த நிலையில், பின்னர் அருகிலிருந்த நான்காவது தொழிற்சாலைக்கும் தீ வேகமாகப் பரவியது. இதனால் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *