பிரதமர் அன்வார் வராததால் மக்களவையில் அமளி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 11-

 தாபோங் ஹாஜி தொடர்பான அரச ஆணைய விசாரணை அறிக்கையை (ஆர்சிஐ) விவாதிப்பதற்காக இன்று நடைபெற்ற மக்களவையின் சிறப்புக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளாததைச் சுட்டிக்காட்டி கூட்டத்தை ஒத்திவைக்கக் கோரியதால் அமளி ஏற்பட்டது.

பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் இல்லாத நிலையில் சிறப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பினர்.

ஹுலு திரங்கானு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட், இந்தக் கூட்டம் முழுமையற்றதாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“இப்போது திருமண நிகழ்ச்சி நடத்தப்படவிருக்கிறது, ஆனால் மணமகன் வரவில்லை,” என அவர் மக்களவையில் தெரிவித்தார்.

ரோசோலின் இந்தக் கருத்துக்கு மக்களவைத் தலைவர் தன் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் எதிர்ப்பு தெரிவித்தார். பிரதமர் கூட்டத்தில் இல்லாததை திருமண நிகழ்ச்சியுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டார்.

சிறப்புக் கூட்டத்தில் அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருப்பதையும், குறிப்பாக துணைப் பிரதமரும் கூட்டத்தில் இருப்பதையும் ஜொஹாரி சுட்டிக்காட்டினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *