திறமை இருக்கிறது; வெற்றி பெறும் வேட்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் – லீ சோங் வெய்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 7 –

மலேசிய பேட்மிண்டன் வீரர்களிடம் சர்வதேச அரங்கில் சாதிக்கும் திறமை இருப்பதாகவும், ஆனால் பெரிய வெற்றிகளைப் பதிவு செய்ய அவர்கள் வெற்றி பெறும் ஆவலை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் நாட்டின் பேட்மிண்டன் ஜாம்பவான் டத்தோ ஸ்ரீ லீ சோங் வெய் தெரிவித்துள்ளார்.

மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் செயல்திறன் குழுத் தலைவராக இருக்கும் அவர், மலேசிய வீரர்களின் வெற்றி வேட்கை இன்னும் போதுமான அளவில் இல்லை என்று கருத்து தெரிவித்தார்.

குறிப்பாக, பிரான்ஸ் வீரர்கள் வெளிப்படுத்தும் போராட்ட மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கை மலேசிய வீரர்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் லீ சோங் வெய் கூறினார்.

கடந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், பிரான்ஸ் ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் உலக சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *