விளையாட்டு உறவுகளின் பாலம் - எம்.எம்.ஜி.வி அணி தலைவர்
- Surendran Sumdraraj
- 02 Aug, 2026
பெட்டாலிங் ஜெயா, ஆக. 2
பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் மிகவும் பிரபலமான வெட்ரன் காற்பந்து அணியான வாரிசான் மேகா மெஸ்ரா கெமிலாங் (MMGV) காற்பந்து அணி தனது விளையாட்டாளர்களுக்கான ஜெர்சி வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்ச்சிக்கு அவ்வணியின் காற்பந்து வீரர்கள் வருகை புரிந்து தங்களது ஜெர்சிகளைப் பெற்றுக் கொண்டனர்.
எம்.எம்.ஜி.வி காற்பந்து அணி, விளையாட்டாளர்களின் நலனில் என்றுமே அக்கறை கொண்டுள்ளது எனவும் இந்துக் குழுவில் இணைந்திருக்கும் அனைவரையும் குடும்ப உறவுகளாகவே பார்ப்பதாகவும் அவ்வணியின் தலைவர் கண்ணா தெரிவித்தார். மேலும் காற்பந்து விளையாட்டைக் கடந்து அணியின் உள்ள ஒவ்வொருவரின் குடும்ப நலனிலும் அணி கவனம் செலுத்த தவறியதில்லை எனவும் அவர் மேலும் சொன்னார்.
விளையாட்டு என்பது உடலுக்கு வலு சேர்க்கும் ஒரு நடவடிக்கை மட்டுமன்று. மாறாக அது மனித உறவுகளை வலுப்படுத்தும் தளமாகவும் திகழ வேண்டும். எங்கள் அணி, ஆட்டக்காரர்களின் தேவைகளில் அக்கறை செலுத்துவது மட்டுமல்லாது, தமிழ்ப்பள்ளிகள், கோயில்கள், சமுதாய நிகழ்ச்சிகளுக்கும் இயன்ற உதவிகள் செய்து வருவதாகவும் அணியின் தலைவர் கூறினார்.













Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



