விபத்தில் 7 வயது சிறுமி பலி! ஓட்டுநர் கைது!
- Sangeetha K Loganathan
- 20 Nov, 2024
நவம்பர் 20,
நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளைப் பின்னாலிருந்து மோதி விபத்தை ஏற்படுத்திய BMW கார் ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்தநர். கடந்த நவம்பர் 15 இரவு 9.50 மணியளவில் புக்கிட் ஜாலிலிருந்து பூச்சோங் செல்லும் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளைப் பின்னிருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 வயது சிறுமி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார்.
விபத்துக்குப் பின் 31 வயது BMW கார் ஓட்டுநர் கோலாலம்பூர் காவல்நிலயத்தில் சரணடைந்ததாகவும் இது திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என வாக்குமூலம் அளித்துள்ளார். ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி RM12,000 ஜாமின் வழங்கியும் அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்த செய்யவும் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை 21 ஜனவரிக்கு ஒத்திவைப்பதாக்வும் அதுவரையில் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.
Pemandu BMW dihadapkan ke Mahkamah Majistret atas tuduhan memandu laju sehingga menyebabkan kematian seorang kanak-kanak perempuan, Nur Naura Nathifa, 7. Kejadian berlaku pada 15 November di Lebuh Raya Bukit Jalil ke Puchong. Tertuduh mengaku tidak bersalah. Mahkamah menetapkan ikat jamin RM12,000, menggantung lesen memandu tertuduh serta menetapkan 21 Januari untuk sebutan semula kes.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *