7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து! – DAMANSARA

top-news

நவம்பர் 20,

நேற்று இரவு டாமான்சாராவிலிருந்து சுபாங் செல்லும் முதன்மை சாலையான NKVE நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இரவு 8.56 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mokhtar தெரிவித்தார். Proton X70, Proton Saga, Toyota Camry, Mazda, Perodua Axia, 2 Toyota Hilux என மொத்தம் 7 வாகனங்கள் விபத்துக்குள்ளானதாகவும் 36 வயதான Toyota Camry வாகனமோட்டி வாகனத்தில்லேயே சிக்கியதாகவும், சுமார் 2 மணிநேரப் போராட்டத்திற்குப் பின் அவர் வாகனத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் சம்மந்தப்பட்ட சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கயதாகவும் விபத்தில் மற்ற வாகனமோட்டிகளும் பயணிகளும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang lelaki cedera dalam kemalangan membabitkan tujuh kenderaan di KM 14.4 Lebuhraya NKVE, Subang ke Damansara. Mangsa berjaya dikeluarkan bomba, insiden menyebabkan kesesakan 4 km.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *