நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்! மூவர் பலி!
- THINAGAREN SANGGAREN
- 26 Aug, 2026
ஆகஸ்ட் 26,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று மாலை மெர்சிங்கிலிருந்து கோத்தா திங்கி செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
HONDA CITY வாகனமோட்டியான 21 வயது ஆடவரும் 20 வயது இளம்பெண்ணும் , மற்றொரு வாகனத்திலிருந்த 31 வயது ஆடவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மீட்புப் படையின் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். TOYOTA VIOS வாகனம் எதிரில் சென்றுகொண்டிருந்த மற்றொரு வாகனத்தை முந்தும் போது, எதிர் திசையில் வந்துக் கொண்டிருந்த HONDA CITY வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



