பெண் ஓட்டக்காரரை மோதிய மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 04 Oct, 2026
அக்தோபர் 4,
தலைநகரின் நடைபெற்று வரும் மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 50 வயதுடைய பெண் வீரரை மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் அதிகாலை 6.15 மணிக்குத் தலைநகரின் Jalan Munshi Abdullah சாலையில் நிகழ்ந்ததாகக் கோலாலம்பூர் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Mohd Zamzuri Isa தெரிவித்தார். இந்த விபத்தில்; 50 வயதுடைய பெண் ஓட்டக்காரர் படுகாயம் அடைந்திருப்பதாகவு 41 வயதுள்ள ஆடவர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் Mohd Zamzuri Isa தெரிவித்தார்.
கும்பலாகச் சிலர்
மோட்டார் சைக்கிளோட்டிகளைத் தாக்கும்படியானக் காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பரவியதாகவும்
மோட்டார் சைக்கிளிலிருந்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் Mohd Zamzuri Isa தெரிவித்தார். சம்பவ இடத்திலேயே 21 வயது
மோட்டார் சைக்கிளோட்டியும் பின்னால் அமர்ந்திருந்த 19 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டதாகவும்
Mohd Zamzuri Isa தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 2 மாராத்தான்
ஓட்டக்காரர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

