கடல்வழி சட்டவிரோதமாக நுழையாதீர்! - MARITIM எச்சரிக்கை!

top-news

திரங்கானு கடல் வழியாக மலேசிய எல்லைக்குள் நுழைந்த மீ்ன்பிடி படகைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் சோதனையிட்டதில் 4 மியான்மார் நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் திரங்கானு கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Ariffin Ghazali தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டவர்கள் முறையான ஆவணங்களின்றி எல்லையைக் கடந்தது மட்டுமின்றி தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மீன் பிடித்ததாகவும் 10,000 லிட்டர் அளவிலான டீசல் எரிவாயுவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நால்வரும் 28 முதல் 47 வயதினர் என்றும் திட்டமிட்டு மலேசியாவுக்குள் மீனவர்களாக நுழைய முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Pengarah Maritim Terengganu, Ariffin Ghazali, melaporkan empat warga Myanmar ditahan kerana memasuki perairan Malaysia secara haram dan menangkap ikan. 10,000 liter diesel dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *