அமெரிக்க தலையீடு குற்றச்சாட்டு: பிஎச் ஏன் பதற்றம் அடைகிறது? – பாஸ் கேள்வி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 7 –

2018-ஆம் ஆண்டுக்கு முன்னர் மலேசிய அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா தலையீடு செய்ய முயன்றதாக பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பக்காத்தான் ஹராப்பான் தரப்பு அளித்த எதிர்வினை குறித்து பாஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பாஸ் மத்திய தகவல் பிரிவு தலைவர் அகமது பத்லி ஷாரி கூறுகையில், இந்த விவகாரத்தில் பக்காத்தான் ஹராப்பானை பாஸ் எந்த இடத்திலும் தொடர்புபடுத்தவில்லை என்றும், இருப்பினும் அக்கூட்டணி கடுமையாக எதிர்வினையாற்றுவது ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்கா மலேசிய அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்ததாக அப்துல் ஹாடி முன்வைத்த குற்றச்சாட்டை மலேசியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்கனவே மறுத்துள்ளது.

இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தால், அதனை அரசியல் சர்ச்சையாக மாற்றுவதற்குப் பதிலாக சட்ட வழிமுறைகள் மூலம் தீர்வு காண முடியும் என்று அகமது பத்லி கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *