கென்யாவில் ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து: 7 பேர் பலி
- Surendran Sumdraraj
- 20 Aug, 2026
நைரோபி: கென்யாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் லைசபா பகுதியில் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காவை சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஹெலிகாப்டரில் விமானி உள்பட 7 பேர் பயணம் செய்தனர். சம்புரு கவுன்டி பகுதியில் உள்ள ஒலோலோக்வே மலை அருகே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
மலை மீது மோதிய வேகத்தில் ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்தது. இதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் விமானி மற்றும் 6 சுற்றுலா பயணிகள் அடங்குவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



