துவான் இப்ராஹிமுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை
- Surendran Sumdraraj
- 30 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 30-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மானுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோருவதுடன், சர்ச்சைக்குரிய கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்வாரின் வழக்கறிஞர் டத்தோ எஸ்.என். நாயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு வெளியே துவான் இப்ராஹிம் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் மீண்டும் பகிரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சட்ட நோட்டீஸில், அவதூறாகக் கருதப்படும் அனைத்து கருத்துகளையும் உடனடியாக வாபஸ் பெற வேண்டும், நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு வெளியிட வேண்டும், மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இனி மீண்டும் முன்வைக்க மாட்டேன் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியையும் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அத்துடன், ஏற்பட்டதாகக் கூறப்படும் சேதத்திற்கு இழப்பீடும், வழக்குச் செலவையும் வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க துவான் இப்ராஹிமுக்கு 48 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்கத் தவறினால், மேலதிக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

